Wednesday 14 March 2018

கல்வி கடனை விசூலிக்கும் பொறுப்பை தனியாரிடம் விற்ற SBI

பாரத ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் பெற்று திரும்ப செலுத்தாதவரா நீங்கள் விரைவில் உங்கள் வீட்டு கதவை தனியார் நிறுவன அடியாட்கள் தட்டும் நிலை உருவாகியிருக்கிறது. மாணவர்களுக்கு தரப்பட்டு திரும்ப செலுத்தப்படாத கல்வி கடன்களில் 50 சதவீதம் அளவை தனியார் நிறுவனத்திற்கு எஸ்.பி.ஐ. விற்றுவிட்டது. மொத்தமுள்ள 1,565 கோடி ரூபாய் நிலுவை தொகையில், 915 கோடி ரூபாயை வசூலிக்கும் பொறுப்பு ஏ.ஆர்.சி. எனப்படும் சொத்து மீட்பு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் மூலம் இந்த விவரம் வெளியாகியிருக்கிறது. கல்வி கடன் பெற்று 3 தவணைகளுக்கு மேல் செலுத்தாத மாணவர்கள் மீது இனி தனியார் வசூல் நிறுவனங்களின் பிடி இறுகும்.
கல்விக் கடனை செலுத்த தனியார் நிறுவன ஊழியர்கள் நெருக்கடி அளித்ததால் 2 ஆண்டுகளுக்கு முன் மதுரை அவனியாபுரத்தில் பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்ததால் ஏ.ஆர்.சி. வசூல் நிறுவனங்கள் தற்காலிகமாக அமைதிகாத்தனர். தற்போது வராக் கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை எஸ்.பி.ஐ. விற்றுவிட்டதால் மீண்டும் தனியார் வசூல் நிறுவன அடியாட்களின் ஆதிக்கம் அதிகாரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment