Wednesday 21 February 2018

ரைசாவுக்கு ஸ்டைலிஷ் டிரெஸ்

                                                                                                                                                                                                                                                                                                                         






                                                  இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா காதலித்து மணந்தவர் ஸப்ரூன் நிசார். குழந்தை, குடும்பத்தை கவனித்து வந்த ஸப்ரூன் தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கணவரின் பாணியில் இசை அமைப்பாள ராகவோ, பாடகியாகவோ இல்லாமல் காஸ்டியூம் டிசைனராக பொறுப்பேற்கிறார். யுவன் சொந்தமாக தயாரிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்குத்தான் காஸ்டியூம் டிசைனராகி இருக்கிறார் ஸப்ரூன்.

                                                                இதுபற்றி அவர் கூறியது: துபாயில் நான் பேஷன் டிசைனிங் படித்தேன். நீண்ட காலமாகவே நான் டிசைன் பணி செய்து வருகிறேன். சினிமாவுக்கு வருவது இதுதான் முதன்முறை. மிகவும் பரவசமாக இருக்கிறேன். இப்படத்தில் ரைசாவுக்கான காஸ்டியூம்களை மட்டும் நான் வடிவமைக்கிறேன். இதற்காக படத்தின் முழுகதையையும் கேட்டு, கதாபாத்திரத்தை புரிந்துகொண்டேன். மிகவும் சந்தோஷமான, அழகான பெண்ணாக ரைசா நடிக்கிறார். அவர் ஏற்கனவே மாடலிங் செய்திருக்கிறார். அதற்கேற்ப காஸ்டியூம் அமைப்பேன்.

                                                               
ஸ்டைலான காஸ்டியூம் வடிவமைக்க பெரிய பட்ஜெட் தேவை அல்லது சரித்திர பின்னணியிலான படமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. கொடுக்கப்பட்ட பட்ஜெட் என்னவோ அதற்குள்ளாக ஸ்டைலான காஸ்டியூம் வடிவமைக்க முடியும். இப்படத்தின் தயாரிப்பாளர் எனது கணவர் யுவன் என்பதால் நான் சலுகைகள் எடுத்துக் கொள்ள மாட்டேன். எனக்கென்று ஒரு பட்ஜெட் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். அதற்குள் நல்ல காஸ்டியூம் அமைப்பேன். எனக்கு நிறைய சுதந்திரம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு ஸப்ரூன் நிசா கூறினார்.

No comments:

Post a Comment